திருப்பூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் 27 பேர் கைது

திருப்பூர் : பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் : பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். 

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் திருப்பூர் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 2,500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, 6 தனியார் மண்டபங்களில் அடைத்து வைத்தனர். இந்த நிலையில், மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டவர்களில், மாலை 6 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 

ஆனால், போராட்டத்திற்கு தலைமை தாங்கிய நிர்வாகிகள் 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...