கோவை : கோவையில் கடந்த இரு தினங்களில் நிகழ்ந்த வாகன விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசூரில் இருந்து காளப்பட்டி செல்லும் சாலையில் வாகராயம்பாளையம் வழியாக மூன்று பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை சென்று கொண்டிருந்த போது, பாக்குத்தோப்பு அருகே எதிரே வந்த கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது .மேலும், அவர்களது பெயர் மற்றும் அவர்களது உறவினர்கள் குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல, போத்தனூர் அருகேயுள்ள மேட்டூரை சேர்ந்த ஆறுமுகம் (19). அதே பகுதியை சேர்ந்த சிம்சன் (18) ஆகிய இருவரும் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் குனியமுத்தூரில் இருந்து மாச்சம்பாளையம் சாலையில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, ஞானபுரம் அருகே சென்ற போது சாலையின் நடுவே இருந்த வேகத்தடையின் மீது இருசக்கர வாகனம் ஏறி இறங்கியதில் வாகனம் சாலையோரம் இருந்த சாக்கடை கால்வாய்க்குள் பாய்ந்தது. இதில், படுகாயம் அடைந்த இருவரையும், அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆறுமுகம் உயிரிழந்தார். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிம்சன் நேற்று உயிரிழந்தார்.
சிறுமுகை அருகேயுள்ள பெத்திக்குட்டையை சேர்ந்த வெள்ளிங்கிரி (38) என்பவர் தன் நண்பர்களுடன் நேற்று மாலை சத்தி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் வெள்ளிங்கிரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக சிறுமுகை போலீஸார் விசாரிக்கின்றனர்.
அதேபோல, காரமடை அருகேயுள்ள தேவனாபுரத்தை சேர்ந்தவர் குழந்தைவேலு (80). இவர் மகன் கனகராஜ் (44). இவர்கள் சாலையோரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த போது, இருவர் மீதும் அவ்வழியாக அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம் மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது தொடர்பாக விபத்து ஏற்படுத்திய பிரேம்குமார் மீது காரமடை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடாகம் சாலை வெங்கிட்டாபுரத்தை சேர்ந்த ராஜன் (50), நீலாம்பூர் மேற்குவீதியை சேர்ந்த மூர்த்தி (40) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு கோவை - திருச்சி சாலை கரையாம்பாளையம் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வேகமாக வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், இருவரும் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.