கோவை : கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 2017-ம் ஆண்டைக் காட்டிலும், 2018-ல் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் தினமும் 1,300-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இதில், கோவை உட்பட திருப்பூர், நீலகிரி, ஈரோடு, மற்றும் அண்டை மாநிலமான கேரளா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். சாலைகளில் விபத்துக்களில் சிக்கும் நபர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டுமன்றி பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இருந்தும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இம்மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கும், விபத்துக்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில், 40 வெவ்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், கோவை அரசு மருத்துவமனையால் பயனடைபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைகளை விட, 2018-ம் ஆண்டு அதிக அளவிலான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக கோவை அரசு மருத்துவமனையின் நிர்வாகத்தினர் பெருமிதம் கொண்டுள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு இம்மருத்துவமனையில் 12,708 முக்கிய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 53,049 சிறிய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில், கடந்த 2018ம் ஆண்டில், 16,072 முக்கிய அறுவை சிகிச்சைகளும், 74,593 சிறிய அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தினந்தோறும் 60 முதல் 70 பெரிய மற்றும் சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்படி நாளுக்கு நாள் ஆண்டுக்காண்டு கோவை அரசு மருத்துவமனையை நாடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.