கோவையில் பொறியாளர் வீட்டின் கதவை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை : போலீசார் விசாரணை

கோவை : கோவையில் பொறியாளரின் வீட்டுக் கதவை உடைத்து 20 பவுன் நகை மற்றும் ரூ. 10,000 கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை : கோவையில் பொறியாளரின் வீட்டுக் கதவை உடைத்து 20 பவுன் நகை மற்றும் ரூ. 10,000 கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

சிங்காநல்லூர் இருகூர் பகுதியைச் சேர்ந்த கருணாநிதி என்பவரது மகன் பிரசன்னகுமார் (37). இவர், கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் டிசைனிங் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், பிரசன்ன குமார், தனது குடும்பத்துடன் சொந்த ஊர் சென்று விட்டு, இன்று காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த துணிகள் அனைத்தும் கலைக்கப்பட்ட நிலையில் இருந்தன. தொடர்ந்து, பீரோவை ஆராய்ந்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த 25 சவரன் நகை மற்றும் ரூ. 10,000 கொள்ளை போனது தெரியவந்தது. இதையடுத்து, தகவலின் பேரில் வந்த சிங்காநல்லூர் போலீசார், கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வீடு முழுவதும் சோதனை செய்து தடயங்களை தேடினர். மேலும், இருகூர் பகுதியை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் இருக்கும் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் குற்றவாளியை அடையாளம் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...