நோயாளிக்கு வெற்றிகரமாக செயற்கை ரத்தக்குழாயை பொருத்திய கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

கோவை : ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளி ஒருவருக்கு செயற்கை இரத்தக்குழாயை வெற்றிகரமாகப் பொருத்தி கோவை அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கோவை : ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளி ஒருவருக்கு செயற்கை இரத்தக்குழாயை வெற்றிகரமாகப் பொருத்தி கோவை அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பழனிசாமியின் மகன் லோகநாதன் (52). இவர் அதேபகுதியில், டெய்லராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த இரண்டு வருடங்களாக இடது கையில் நோய் தொற்று ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதைத் தொடர்ந்து, கடந்த 1-ம் தேதி இவர் கோவை அரசு மருத்துவமனையின் இரத்தநாள அறுவை சிகிச்சைத் துறையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இடது கைக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு இருப்பதைக் கண்டறிந்தனர்.

இதைத் தொடர்ந்து, அவருக்கு கடந்த 17-ம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவருக்கு ஏற்பட்டுள்ள இரத்தக் குழாய் அடைப்பை சரிசெய்யும் வகையில், செயற்கை ரத்த குழாயை பொருத்தி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ரூ.3 லட்சம் மதிப்புள்ள இந்த அறுவை சிகிச்சை முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு தற்போது லோகநாதன் முழுமையாக குணமடைந்துள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...