விநாயகன், சின்னத்தம்பி 'ஆபரேசன் 35' : தடாகம் வனப்பகுதியில் சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்துமா..?

கோவை : விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 35 நாட்களுக்குள் விநாயகன், சின்னத்தம்பி காட்டு யானைகள் கோவையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், தடாகம் வனப்பகுதியில் சுற்றுச்சூழல் தாக்கம் ஏற்படும் என கூறப்படுகிறது.


கோவை : விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 35 நாட்களுக்குள் விநாயகன், சின்னத்தம்பி காட்டு யானைகள் கோவையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், தடாகம் வனப்பகுதியில் சுற்றுச்சூழல் தாக்கம் ஏற்படும் என கூறப்படுகிறது. 

பல ஆண்டுகளுக்கு முன்பு தடாகம் வனப்பகுதி ஒருசில செங்கல் சூளைகள், செங்கல் லாரிகளுடன் புழுதி நிறைந்தே காணப்பட்டு வந்தது. தற்போது, அங்குள்ள விவசாய நிலங்களும், செங்கல் சூளைகளாக மாற்றப்பட்டு, குடிசைகளாக இருந்த வீடுகள், பங்களாக்களாகவும், தங்கும் விடுதிகளாகவும் உருமாறி வருகின்றன. இந்த சூழலில், அப்பகுதியில் மனிதர்கள் - யானைகள் மோதல் அதிகரித்து வருவது புதிய பிரச்சனையாகியுள்ளது. கோவையில் தடாகம் பகுதியில்தான் மனிதர்கள் - யானைகள் மோதல் ஏற்படுகிறது என்று கூறினால், அதனை ஏற்றுக் கொள்ள முடியது. அதேவேளையில், மனிதர்கள் - யானைகள் மோதல்களின் புகலிடமாக தடாகம் மாறியிருப்பதை மறுக்கவும் முடியாது.

இதற்கு காரணம், மேம்பாட்டு நடவடிக்கைகள் என்ற பெயரில் வனப்பகுதிகளை ஆக்கிரமித்தல், மனிதர்களின் நடமாட்டம் போன்ற செயல்பாடுகளினால், மனிதர்கள் யானைகளிடம் விரோதப் போக்கை ஏற்படுத்துகின்றனர். பொதுவாக, மக்கள் பல்வேறு வழிகளில் யானைகளுக்கு இடையூறுகளை கொடுத்து வருகின்றனர். யானைகளை விரட்டுவதற்காக, கற்கள் மற்றும் செங்கற்களை விட்டு எறிவது, நெருப்புகளை கொளுத்தி தூக்கி வீசுவது போன்ற சம்பவங்களை உதாரணத்திற்குக் கூறலாம். 

வனப்பகுதிகளை விட்டு வெளியே வரும் பெரும்பாலான யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. அவற்றில், பெரியதம்பி, சின்னத்தம்பி, விநாயகன், தாய் மற்றும் குட்டி ஆகிய பெயர்களில் ஒரு சில யானைகள் உள்ளூர் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வருகின்றன. 

இதற்கு மத்தியில், சின்னத்தம்பி, விநாயகன் ஆகிய இரண்டு காட்டு யானைகள் கடந்த சில ஆண்டுகளாக குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வந்து கொண்டிருந்தன. இவை, விவசாய நிலங்களை சேதப்படுவதாகக் கூறி, இரு யானைகளையும் வேறு இடத்திற்கு பிடித்துச் சென்று விட வேண்டும் என விவசாயிகள் வனத்துறையினருக்கு மிகுந்த அழுத்தத்தைக் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, வெறும் 40 நாட்களுக்குள் இரண்டு யானைகளும் தடாகம் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் விநாயகன் பிடிக்கப்பட்டு, முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியிலும், கடந்த 25-ம் தேதி சின்னத்தம்பி வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வரலியாறு பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது. 

விநாயகனைப் பொறுத்தவரையில் மனிதர்களிடம் நெருங்கி பழகுவதை கொஞ்சம் விரும்பவில்லை என்பதால், அவ்வப்போது ஆக்ரோஷமாக இருக்கும். ஆனால், சின்னத்தம்பியை பொறுத்தவரையில், மனிதர்கள் தொட்டு பழகும் அளவிற்கு நெருங்கிப் பழகும் தன்மை கொண்டது. அண்மையில் வெளியாகிய வீடியோ ஒன்றில், தாய் மற்றும் குட்டியுடன் உலா வரும் விநாயகன், ஏற்புடைய சூழலை உணர்ந்து, மக்களிடையே ஆக்ரோஷமான செயல்களில் ஈடுபடுவதை நாம் கண்கூட பார்த்திருப்போம்.

அதேவேளையில், சின்னத்தம்பியை கண்டு பொதுமக்கள் பயப்படுவதில்லை. காரணம், எதார்த்தமாக மனிதர்களிடம் நெருங்கிப் பழகும் குணாதிசயம் கொண்டிருப்பதால்தான். உதாரணமாக, சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவே சான்றாகும். அதில், ஒரு வீட்டில் சாக்குப் பையில் இருந்த அரிசியை எடுத்து உண்ணும் போது, சிறுமி ஒருவர் அருகாமையில் எந்தவொரு பயமும் இன்றி வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார். இந்தக் காட்சிகளினால், சின்னத்தம்பி பொதுமக்களிடையே எவ்வளவு நட்புணர்வுடன் இருந்து வந்ததை அறிய முடிந்தது. 

இதேபோல, சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்தின் வளாகத்தில், பொதுமக்கள் சூழ்ந்திருந்த போது, வாயில் குச்சியை கடித்தபடி ராஜநடை போட்டு வந்த சின்னத்தம்பியின் வீடியோ வைரலானது. 

விவசாயிகளிடையே வெறுப்பை ஏற்படுத்தியிருந்தாலும், மக்களிடையே பாசத்தை சம்பாரித்த இந்த இரண்டு யானைகளையும் பிடிக்கும் போது முரண்பாடான சம்பவங்ளே நிகழ்ந்தன. விநாயகனைப் பிடிக்கும் போது, வனத்துறை அதிகாரிகள் பொறுமையைக் கையாண்டனர். ஆனால், கொடூரமான முறையையும், மன அழுத்தத்தை கொடுத்தே சின்னத்தம்பியை பிடிக்க முடிந்தது. கும்கி விஜய் ஆக்ரோஷமாக சின்னத்தம்பியை லாரியில் ஏற்றுவதற்காக முட்டித் தள்ளிய போது, சின்னத்தம்பியின் தந்தங்கள் உடைந்த சம்பவம் சுற்றியிருந்த அனைவரிடத்திலும் வேதனையை ஏற்படுத்தியது. 

வெறும் 40 நாட்களுக்குள் விநாயகன், சின்னத்தம்பி ஆபரேஷனை செய்து முடித்த வனத்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்தாலும், உள்ளூர் மக்களின் அன்பைப் பெற்ற இரண்டு யானைகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கண்ணீர் மழை பொழியப்பட்டது. 

"யானைகளின் எண்ணிக்கையைப் பெருக்க உதவிகரமாக இருந்த இரண்டு ஆண் யானைகளை தடாகம் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பது, இந்த வனப்பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். விநாயகன் முன்மாதிரியான காட்டு யானையாகும். இது சிறந்த மனநிலையையும், மதநீர் சுரக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. இதுபோன்ற யானைகள் வனங்களுக்கு தேவையான ஒன்றாகும்," என்கிறார் இரு யானைகளைப் பிடிக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த தலைமை கால்நடை மருத்துவர் என்.எஸ். மனோகரன்.

கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மிகவும் பெரியது விநாயகனாகும். ஆண்-பெண் யானைகளின் எண்ணிக்கை சீராக இருப்பதற்கு இந்த யானை முக்கிய பங்காற்றியுள்ளது, என்றார் அனுபவ ஆலோசகர் அஜய் தேசாய்.

தடாகம் பற்றிய வரலாற்றை சின்னத்தம்பி, விநாயகன் ஆகிய காட்டு யானைகள் மாற்றியமைத்திருந்தாலும், தற்போது, வெடிசத்தம், மனிதர்களின் தொந்தரவு, கற்களைக் கொண்டு தாக்குதல் போன்ற பிரச்சனைகளை விட்டு, புதிய வனப்பகுதிக்குள் தஞ்சம் புகுந்துவிட்டன. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...