மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியமைத்தால், நாட்டில் உள்ள அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.

வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில், பா.ஜ.க.வுக்கு எதிராக பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக, அண்மையில் கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகளின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தப் பொதுக்கூட்டத்திற்கு கிடைத்த ஆதரவு மற்றும் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளால், எப்படியும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, பிரதமர் ஆகிவிடலாம் என்ற நம்பிக்கை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியமைத்தால், நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழைகளுக்கும் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதன் மூலம், மக்களவை தேர்தலுக்கான வரலாற்று சிறப்புமிக்க வகையிலான முதல் வாக்குறுதியை அவர் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம், நாட்டில் பசியைப் போக்கி, ஏழ்மையை அகற்றிவிடலாம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.