ஆழியாறு அணையில் 33-வது வாரக் களப்பணியாற்றிய வனப்பாதுகாப்பு அறக்கட்டளை

கோவை : சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் விதமாக, கோவை மாவட்டம் ஆழியாறு அணைப் பகுதியில் 33-வது வாரமாக வனப்பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் களப்பணி மேற்கொள்ளப்பட்டது.

கோவை : சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தும் விதமாக, கோவை மாவட்டம் ஆழியாறு அணைப் பகுதியில் 33-வது வாரமாக வனப்பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. 

வனப்பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கில், டார்க்கெட் ஜுரோ என்விரான்மென்ட் மற்றும் வனப்பாதுகாப்பு அறக்கட்டளையும் இணைந்து வாரந்தோறும் ஆழியாறு - வால்பாறை சாலையில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகளின் போது, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது, மதுபாட்டில்களை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 



இந்த நிலையில், நேற்று 3-வது வாரமாக நடந்த களப்பணியானது, காண்டூர் கால்வாய் மற்றும் 2 மழைத்தண்ணீர் செல்லும் கால்வாய்களில் இளம் தன்னார்வலர்கள் மேற்கொண்டனர். கடந்த 33 வாரங்களில் 4.5 டன் எடைகொண்ட பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மதுபாட்டில்களை வால்பாறை வனப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து சேகரித்தனர்.



முதற்கட்டமாக, முதல் கொண்டை ஊசி வளைவில் இருந்து 30-வது கொண்டை ஊசி வளைவு வரை தூய்மைப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2-வது கட்டமாக, ஆழியார் சோதனை சாவடிப் பகுதியில் நடந்த தூய்மைப் பணிகளுக்கு பிறகு, தற்போது காண்டூர் கால்வாய் சுத்தப்படுத்தப்பட்டது.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...