கோவை : மேட்டுப்பாளையம் வட்டத்தைச் சேர்ந்த பெந்தகோஸ்தே கிறிஸ்துவ சபைகளின் உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ சபைகளில் 5,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். சபை சம்பந்தப்பட்ட போதகர்கள் சபை நடத்தி வருகின்றனர். வருமான நோக்கின்றி செயல்படும் சபைக்கு உறுப்பினர்களின் அளிக்கும் பங்களிப்பு மூலமும், அவர்கள் வழங்கும் காணிக்கைகள் ஜீவியம் செய்து வருகிறோம். சபைகளின் உறுப்பினர்கள் மரணமடைந்தால், இதுவரை சி.எஸ்.ஐ. நிர்வாகத்திடம் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இடபற்றாக்குறை காரணமாகவும், கிறிஸ்துவ ஆலயங்கள் அதிகம் உள்ளதால், ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் சடலங்களை புதைக்க தடை விதித்து சி.எஸ்.ஐ. நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதால், சபை உறுப்பினர்கள் அல்லாதவர்களை அடக்கம் செய்ய இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மேட்டுப்பாளையம் பகுதியில் கல்லறை அமைக்க ஒரு ஏக்கர் நிலம் வழங்கி உதவிட வேண்டும், இவ்வாறு கிறிஸ்துவ சபைகளின் போதகர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.