நீலகிரி : விவசாயிகளுக்கு சாதகமான மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்த இந்திய மண் வள பாதுகாப்பு சங்கத்தின் 28-வது தேசிய கருத்தரங்கு முதன்முறையாக உதகையில் வரும் 31ம் தேதி தொடங்குகிறது.

இது குறித்து முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன் கூறியதாவது :- நீலகிரி மாவட்டம் உதகையில் இயங்கி வரும் இந்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், இந்தியாவின் வேளாண் வளர்ச்சி மற்றும் அதன் உற்பத்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த நிலையில், நீர் வளங்களுக்கு முக்கிய பாங்காற்றி வரும் காலநிலையானது, வழக்கத்தை விட தற்போது கடுமையாக மாற்றமடைந்துள்ளதால், நீர் வளங்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனைப் பாதுகாக்க மண் அரிப்பை குறைத்தல், சீரழிந்த நிலங்களை புனரமைத்தல், மண் ஈரப்பதத்தை தக்க வைத்தல் மற்றும் பயிர்களின் விளைச்சலை அதிகரித்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தொழில்நுட்பங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்த செயல்பாடுகளை முன்னிறுத்தி வரும் 31-ம் தேதி முதல் 2-ம் தேதி வரை உதகையில் இயங்கி வரும் இந்திய மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு நிறுவனம், டெல்லியில் இயங்கி வரும் இந்திய மண் வள பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில இந்திய மண் வள பாதுகாப்பு சங்கம் ஆகியோர் இணைந்து 28-வது தேசிய கருத்தரங்கு நடத்துகிறது. இத்தேசிய கருத்தரங்கின் குறிக்கோளானது, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கும் விவசாயிகளுக்கு சாதகமான மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் நடைபெறுகிறது.
இக்கருத்தரங்கை வரும் 31-ம் தேதி உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்து, நாட்டில் சிறந்த 25 விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களுக்கு விருதுகளை வழங்கவுள்ளார், இவ்வாறு கூறினார்.