கோவை மாநகர எல்லைக்குள் வீடுகள் ஒதுக்கி தரக்கோரி வி.கே.கே. மேனன் நகர் மக்கள் மனு

கோவை : மாநகர எல்லைக்குள் வீடுகள் ஒதுக்கி தரக்கோரி வி.கே.கே.மேனன் குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வந்த பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : மாநகர எல்லைக்குள் வீடுகள் ஒதுக்கி தரக்கோரி வி.கே.கே.மேனன் குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வந்த பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகளில் ஏராளமானோர் வசித்து வந்தனர். இந்தக் கட்டிடங்கள் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆன நிலையில், இடியும் தருவாயில் இருந்ததால், அங்கு வசித்தவர்கள் அப்புறப்படுத்தி, அதற்கு மாற்றாக கீரணத்தம் பகுதியில் வீடுகள் கட்டி தரப்பட்டது. இங்கு 360 நபர்களுக்கு வீடுகள் ஒதுக்கி தரப்பட்ட நிலையில், அங்கு வீடுகள் ஒதுக்கி தரப்பட்டவர்கள், கீரணத்தம் பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்றும், பெரும்பாலானோர் மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களாக வேலை செய்து வருவதால் குறித்த நேரத்திற்குப் பணிக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்படுவதாக தெரிவித்தனர்.



மேலும், தங்களது குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வர போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமல் சிரமப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குடிசை மாற்று வாரிய வீட்டில் வசித்து வந்த தங்களுக்கு, கோவை மாநகர எல்லைக்குள் வீடுகள் ஒதுக்கி தர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...