ஆசிரியர்களின் போராட்டத்தால் மூடியே கிடக்கும் பள்ளிகள் : ஆத்திரத்தில் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

திருப்பூர் : ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் தொடர் வேலைநிறுத்தத்தால், திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டும், சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் : ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் தொடர் வேலைநிறுத்தத்தால், திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டும், சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் தொடர் போராட்டத்தின் காரணமாக, திருப்பூரில் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் வராத காரணத்தால் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். திருப்பூர் தேவாங்கபுரம் நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு வரை 400 மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், 7 ஆசிரியர்கள் வரை பணிபுரிந்து வந்தனர். அவர்களில் தற்போது 2 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிய வந்துள்ளதால், வகுப்புகள் திறக்கப்படாமல், மாணவர்களின் படிப்பு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 



அதேபோல, செட்டிபாளையம் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் இன்றி பூட்டப்பட்டிருந்ததால், ஆத்திரமடைந்த பெற்றோர் மாணவர்களுடன் தாராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, ஒரு ஆசிரியர் மட்டும் வருகை தந்து பள்ளியை திறந்ததால், போராட்டத்தைக் கைவிட்ட பெற்றோர், பள்ளியில் பாதுகாப்பு இல்லை என தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றனர். இதேபோல, நொய்யல் வீதி, விஜயாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் ஆசிரியர்கள் வராததால், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



ஆசிரியர்கள் போராட்டம் நீடித்து வரும் நிலையில், தொகுப்பூதிய ஆசிரியர்கள் குறைவான அளவிலேயே விண்ணப்பித்துள்ளதால், தனியார் பள்ளி ஆசிரியர்கள் மூலம் அரசுப் பள்ளிகளில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...