நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் 2-ம் போக காய்கறி சாகுபடியில் ஈடுபட மும்முரம் காட்டி வருகின்றனர்.

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக் காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான விளைநிலங்கள் மற்றும் குத்தகைக்கு எடுத்துள்ள நிலங்களில், கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், கா-பிளவர், முள்ளங்கி, மேரக்காய், பீன்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலைக் காய்கறிகளையும், ஒஸ் பெர்க், சுகுனி, சல்லாரை, புரூக்கோ உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகளையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இரண்டாம் போகத்திற்காக விவசாயப் பணிகளை விவசாயிகள் தற்போது தொடங்கி உள்ளனர். இதையொட்டி, விளைநிலங்களை உழுது நிலத்தைப் பதப்படுத்தி வருகின்றனர். மேலும், இயற்கை உரங்களை லாரிகள் மூலம் கொண்டு வந்து, தங்களது விளைநிலங்களுக்கு இடும் பணியிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். விளை நிலங்களில் அறுவடை செய்யாமல் ஓருசில இடங்களில் காணப்படும் காய்கறிகளை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், காய்கறி சாகுபடி அதிகரிக்கவும், மண்ணின் வளம் பாதிக்காமல் இருக்கவும் ரசாயன உரங்கள் இடுவதை பெரும்பாலும் தவிர்த்து, இயற்கை உரத்தை வாங்கி மண்ணுடன் கலந்து வருகின்றனர். ஒரு லோடு இயற்கை சாண உரத்தை ரூ. 22,000 வரை திம்பம் பகுதியில் இருந்தும், உள்ளூரில் இருந்தும் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.