அலகுமலையில் தீண்டாமைவேலியில் நுழைவு வாயில் அமைக்கும் பணி : போலீசார் - பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் அகற்றப்பட்ட தீண்டாமை வேலியில் ஒரு புறம் நுழைவு வாயில் அமைக்கும் பணியினை முற்றுகையிட்டு போராட்ட குழுவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் அகற்றப்பட்ட தீண்டாமை வேலியில் ஒரு புறம் நுழைவு வாயில் அமைக்கும் பணியினை முற்றுகையிட்டு போராட்ட குழுவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 



திருப்பூர் மாவட்டம் அலகுமலை கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோவில் வழியாக அப்பகுதியினர் குடிநீர் எடுத்துச்செல்லவும் குழந்தைகளை அழைத்துச்செல்லவும் பாதையாக இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம், அவர்களின் வழித்தடத்தை மறித்து கம்பிவேலி அமைக்கப்பட்டது. இதனை அப்பகுதி பொதுமக்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, கம்பிவேலியில் ஒரு பகுதி அகற்றப்பட்டு அப்பகுதியினருக்குப் பாதை அமைக்கப்பட்டது. 



இருப்பினும், கம்பிவேலியை முழுவதுமாக அகற்றவேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், கம்பிவேலி அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் பொதுமக்களின் வழித்தடத்தை மறைக்கும் வகையில் நுழைவுவாயில் அமைக்க இன்று காலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்களுடன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் போராட்டத்தில் ஈடுபட்டது. 

அப்போது, தோண்டப்பட்ட குழியினை மூட முயற்சித்த அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட பின் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...