கோவையில் 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 2,000-க்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது

கோவை : பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 2,000 ஆசிரியர்களை போலீசார் இன்று கைது செய்தனர்.


கோவை : பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 2,000 ஆசிரியர்களை போலீசார் இன்று கைது செய்தனர். 



புதிய ஓய்வூதிய திட்டமான சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், பள்ளி கல்வி துறையையும் தொடக்கக் கல்வி துறையும் இணைக்கக் கூடாது மற்றும் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி பள்ளிகளுக்குப் பணியிட மாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



கடந்த 6 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு, கைதாகி விடுதலையான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், 7வது நாளாக இன்றும் மாவட்ட தலைநகரங்களில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். 



"அரசு எங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரையில், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை," என்கின்றனர் போராட்டக்காரர்கள்.

இதனிடையே, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு ஒருபுறம் நடவடிக்கை எடுத்து வந்தாலும், தற்போது வரை பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டே கிடக்கின்றன. கோவையில் மணியத்தோட்டம் பகுதியில் உள்ள பெண்கள் நடுநிலைப்பள்ளி தற்போது வரை மூடியே கிடக்கிறது. பள்ளிக்கு வரும் மாணவிகள், அலுவலக அறையில் அமர வைக்கப்படுகின்றனர். 

"இன்று பள்ளி செயல்படும் என எதிர்பார்த்து வந்தோம். ஆனால், நிலைமை மாறாக உள்ளது," என்கின்றனர் பள்ளி மாணவர்கள்.



இது குறித்து பதிவு அலுவலர் கூறுகையில், "1 முதல் 8-வது வரையிலான வகுப்புகளைக் கொண்ட இந்தப் பள்ளியில் மொத்தம் 98 மாணவிகள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக 5 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்," என்றார். 

 

"கோவை மாவட்டத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 3,152 ஆசிரியர்கள் பணியைப் புறக்கணித்து, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்," எனக் கூறுகிறார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.



இதேபோல, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அப்போது, போலீசாருக்கும், அரசு ஊழியர்களுக்குமிடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  



 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...