நீலகிரி : பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட 9 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி உதகையில் 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய 21 மாத நிலுவை தொகையை ஜனவரி 2016 முதல் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒருவாரமாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், 7-வது நாளாக இன்று உதகை ஏ.டி.சி. பகுதியில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த சாலைமறியல் போராட்டத்தால், முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் தொட்டபெட்டா, தாவரவியல் பூங்கா, சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, வெகுநேரம் சுற்றுலாப் பயணிகள் சாலையில் காத்திருந்தனர். இதையடுத்து, அனுமதியின்றி சாலைமறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.