கோவை : கோவை மேட்டுப்பாளையத்தில் இரண்டு ரூபாய்க்கு ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் தானியங்கி கருவி திட்டத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது.

தமிழக அரசின் 2018 - 19 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், ஒரு ரூபாயிக்கு ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்குவதாக அரசு அறிவித்தது. இதனை செயல்படுத்தும் விதமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நகராட்சியின் 33 வார்டு பகுதிகளிலும், சமூகநல சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
அப்பெக்ஸ் அசோசியெட் என்ற தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் தலா ரூ.13 லட்சம் செலவில் உருவாக்கப்பட உள்ள இந்தத் திட்டத்தின் பூமி பூஜை நகராட்சியின் 22-வது வார்டில் நடைபெற்றது. மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ் ஆகியோர் கலந்துகொண்டு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பு செய்யும் வகையில் உருவாக்கப்படும் இந்த தானியங்கி குடிநீர் கருவியின் மூலம், ரூ. 2 அளித்தால் ஒரு லிட்டர் கூளிங் தண்ணீரும், ரூ. 7-க்கு 20 லிட்டர் தண்ணீரும் பொதுமக்களுக்கு அளிக்கும் வகையில் செயல்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.