கோவை : காரமடை அருகே சாலை ஓரத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரமடை அருகே உள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் குழந்தை வேலு (80). இவரது மகன் கனகராஜ் (45). இவர்கள் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவரும் தேக்கம்பட்டி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் தங்கராஜுடன் தேவனாபுரத்தில் நேற்றிரவு சாலையோரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் அசுர வேகத்தில் வந்த இளைஞர்கள், அவர்கள் மீது பயங்கரமாக மோதினர். இதில், குழந்தைவேலு, கனகராஜ், தங்கராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அவர்களை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர், அவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில், குழந்தைவேலு மற்றும் கனகராஜ் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். தங்கராஜ் கால் முறிந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பிரேம் குமார் (22) என்பவர் கை முறிந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.