கோவையில் 1,108 பயனாளிகளுக்கு ரூ. 8.5 கோடி மதிப்பிலான தொழிற்கடனுதவி : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்

கோவை : தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 1,108 பயனாளிகளுக்கு ரூ. 8.5 கோடி மதிப்பில் தொழிற்கடனுதவிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.


கோவை : தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 1,108 பயனாளிகளுக்கு ரூ. 8.5 கோடி மதிப்பில் தொழிற்கடனுதவிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். 



தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் சுயதொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் வங்கிக்கடன் வழங்கும் விழா நேற்று ஊரக வளர்ச்சித்துறையின் செயலர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளருமான ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் நடைபெற்றது. இம்முகாமினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். 

முத்ரா திட்டத்தின் கீழ் 31 பயனாளிகளுக்கு ரூ. 31.55 லட்சம் மதிப்பிலும், அமுதசுரபி நிதித் திட்டத்தின் கீழ் 21 பயனாளிகளுக்கு ரூ. 5.15 லட்சம் மதிப்பிலும், தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிகளுக்கு ரூ.17 லட்சமும், தனிநபர் தொழில் கடன் வழங்க 208 பயனாளிகளுக்கு ரூ. 222.44 லட்சம் மதிப்பிலும், 44 மகளிர் சுயஉதவிக் குழுக்குளுக்கு ரூ. 195.31 லட்சம் மதிப்பிலும், 5 விவசாயிகளுக்கு விவசாயக்கடனாக ரூ. 29.5 லட்சமும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் ஆகியவற்றின் மூலம் 26 சுய உதவிக்குழுக்கள் உட்பட 460 நபர்களுக்கு ரூ.3.50 கோடி மதிப்பிலும் என மொத்தமாக 1108பயனாளிகளுக்கு ரூ.8.5 கோடி மதிப்பிலான கடனுதவிகளையும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார். 

7 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ. 10.25 லட்சம் மதிப்பிலான நிவாரணத் தொகையினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் கிறிஸ்துவ ஆலயங்கள் பராமரிப்பு பணிக்காக கோவை மாவட்டத்தில் முதல்முறையாக புலியகுளத்திலுள்ள ஜெருசலேம் பிரேயர் தேவாலயத்திற்கு ரூ. 75,000-ம், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலமாக 10 நபர்களுக்கு தலா ரூ. 5,000 வீதம் ரூ. 50,000ம் நிதியுதவியும், 13 நபர்களுக்கு ரூ. 65,234 மதிப்பில் சலவைப் பெட்டிகளையும் அவர் வழங்கினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...