கோவையில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு இதுவரை 2,500 பேர் விண்ணப்பிப்பு

கோவை : தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக இதுவரை 2,500-க்கும் மேற்பட்டோர் கோவை முதன்மை கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ள நிலையில், அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தங்களால் பணியாற்ற முடியும் என விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை : தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக இதுவரை 2,500-க்கும் மேற்பட்டோர் கோவை முதன்மை கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ள நிலையில், அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தங்களால் பணியாற்ற முடியும் என விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.



9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 7-வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டுமென அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசின் வேண்டுகோளை ஏற்காத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாத நிலையில், தற்காலிக ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று 3-வது நாளாக தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 2,500-க்கும் மேற்பட்டோர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். 



"இதுவரை யாருக்கும் எந்தவொரு பள்ளியிலும் தற்காலிக பணி நியமனம் ஆணை கொடுக்கப்படவில்லை. வேலை இல்லாத தங்களுக்கு இந்த வேலை நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். அரசு அளிக்கும் ரூ. 10,000 தொகுப்பூதியம் தற்போதைக்கு தங்களுக்கு போதுமானதாக இருக்கும். மேலும், தற்போது பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையாக எங்களால் பணிபுரிய முடியும். எங்களுக்கு ஏற்கனவே விதமான கற்பித்தல் பயிற்சிகள் அளிக்கப்பட்டு இருப்பதால், எங்களால் பணியை சிறப்பாக செய்ய முடியும்," என தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...