கோவை ஆர்.எஸ்.புரம் அருகே ஓய்வுபெற்ற மின்ஊழியர் வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து : ஒருவர் கவலைக்கிடம்

கோவை : ஆர்.எஸ்.புரம் அருகே ஓய்வுபெற்ற மின் ஊழியர் வீட்டில் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்த விபத்தில், ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை : ஆர்.எஸ்.புரம் அருகே ஓய்வுபெற்ற மின் ஊழியர் வீட்டில் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்த விபத்தில், ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 



ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் சின்னராஜ்(58), தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டின் கீழ்தளத்தில் சின்னராஜூம், மேல்தளத்தில் அவரது மகன் மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், சின்னராஜ் வீட்டின் சமையலறையில் உள்ள சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதையறியாமல், இன்று அதிகாலை வழக்கம்போல, பால் வாங்கி விட்டு வீட்டுக்கு வந்த சின்னராஜ், உள்ளே நுழைந்து லைட்டை போட்டுள்ளார். அப்போது, கேஸ் கசிவு ஏற்பட்ட நிலையில் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் சின்னராஜ் படுகாயம் அடைந்தார். 

மேலும், வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ், ஃபேன் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சேதமடைந்தன. வெடிசத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள், உடனடியாக விரைந்து சென்று உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சின்னராஜை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...