கோவை : மாணவர்களின் நலனுக்காக ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்புமாறு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள சிக்கதாசம்பாளையத்தில் செயல்படும் தனியார் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அப்போது, விளையாட்டு மற்றும் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது :- தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளின் கல்வி தரம் உயர்ந்து வருகிறது. நீட் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில், அதற்கேற்றவாறு பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு முடித்தாலே வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் கல்வித்துறையில் செயல்படுத்தி வருகிறோம், எனக் கூறினார்.
நிகழ்ச்சிக்குப் பின் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஆசிரியர்கள் போராட்டம் நியாயமற்றது. குறிப்பாக, ஏழை, எளிய மாணவர்கள் நலனுக்காகப் போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். இதனைத்தான் அரசு மட்டுமின்றி பொதுமக்கள், நீதிமன்றம் என அனைவரும் விரும்புகின்றனர். எனவே, போராட்டத்தைக் கைவிட்டு அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.