தொலைப்பேசியில் உயரதிகாரிகள் போல பேசி மோசடி செய்யும் கும்பலைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு

கோவை : கோவையில் அரசு உயரதிகாரிகள் போல் தொலைப்பேசியில் பேசி பணம் கேட்டு ஏமாற்றும் மோசடி கும்பலை பிடிக்க, கோவை மாநகர போலீசார் சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை : கோவையில் அரசு உயரதிகாரிகள் போல் தொலைப்பேசியில் பேசி பணம் கேட்டு ஏமாற்றும் மோசடி கும்பலை பிடிக்க, கோவை மாநகர போலீசார் சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

பெருகி வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி குற்றவாளிகள் பல்வேறு முறைகளில் மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் திட்டமிட்டு குறிப்பிட்ட சில எண்களைத் தொடர்புகொண்டு அரசு அதிகாரிகள் போல் பேசி பணம் பறிக்கும் கும்பல்கள் நடமாடி வருகிறது. இந்த நிலையில், கோவை காளப்பட்டியை சேர்ந்த கல்யாண சுந்தரம் என்ற கட்டுமான நிறுவனத்தின் மேலாளருக்கு நேற்று முன்தினம் ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. 

அதில், பேசிய நபர், ‘‘நான் கோவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எனக்கூறி அறிமுகமாகிக் கொண்டு, தனது நண்பருக்கு புதிய வீடு தேவைப்படுகிறது. மேலும், அவருக்கு நான் ரூ. 1 லட்சம் தர வேண்டியுள்ளது. நான் தற்போது ஒரு ஆய்வுக்கூட்டத்தில் இருப்பதால், தனது நண்பரை காளப்பட்டி சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே அனுப்பி வைக்கிறேன். அவரிடம் பணத்தை கொடுத்து அனுப்புங்கள்,’’ எனக்கூறி உள்ளார். 

இதில், சந்தேகம் அடைந்த கல்யாணசுந்தரம் பணத்திற்காக காத்திருந்த நபரை பிடித்து பீளமேடு போலீஸாரிடம் ஒப்படைத்தார். போலீஸார் அந்த நபரிடம் விசாரித்த போது, பிடிபட்டவர் கால்டாக்சி ஓட்டுனர் என்பதும், பணம் கேட்ட மர்மநபர், இவரை பணம் வாங்க அனுப்பி வைத்து விட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, கல்யாணசுந்தரம் அளித்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார், தொலைப்பேசியில் பேசிய மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



இதனிடையே, மாநகர போலீசார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :- அரசு உயரதிகாரிகள் எனக்கூறி பணம் கேட்டு மிரட்டல் விடுக்கும் நபரிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற மோசடி நபரை பிடிக்க மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவின் பேரில், மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் உடைமையை காத்துக்கொள்ள எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற சந்தேகப்படும் நபர்கள் தொலைப்பேசி மூலம் அழைக்கும் போது காவல்துறைக்கு தகவல் தரவேண்டும், என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...