கோவை : குடியரசு தினத்தன்று சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 49 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடமிருந்து 504 மதுபாட்டில்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் குடியரசு தின விழாவிற்கு ஜனவரி 26-ஆம் தேதி மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம். அதேபோல கடந்த சனிக்கிழமை மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்வதை தடுக்கவும், மது விற்பனையில் ஈடுபடும் நபர்களை கைது செய்யவும் மாநகர் மற்றும் மாவட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதில், மதுக்கடைகளுக்கு அருகே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்றதாக மாநகரில் 27 பேரும், மாவட்ட பகுதியில் 22 பேரும் என மொத்தம் 49 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 504 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.