சாலையோரத்தில் படுத்த படுக்கையாகக் கிடந்த முதியவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்த சமூக ஆர்வலர்

கோவை : சிங்காநல்லூர் அருகே சாலையோரத்தில் படுத்த படுக்கையாக நோயுற்று இருந்த முதியவரை, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கோவை : சிங்காநல்லூர் அருகே சாலையோரத்தில் படுத்த படுக்கையாக நோயுற்று இருந்த முதியவரை, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கோவை, சிங்காநல்லூரில் உள்ள தியாகி சண்முகா நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக முதியவர் ஒருவர் சாலையின் ஓரத்தில் படுத்த படுக்கையாகக் கிடந்துள்ளார். இந்நிலையில், நேற்று முதியவரின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து, அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலரான ஆத்மா அறக்கட்டளை நிறுவனர் சரவணனுக்கு தகவல் கொடுத்தனர். 



இதனையடுத்து, உடனடியாக வந்த சரவணன் அந்த முதியவருக்கு முதலுதவி கொடுத்தார். பின்னர் முதியவரை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சாலையில் கிடக்கும் உயிர்களைப் பலபேர் கடந்து சென்றாலும் ஒரு சிலர் இதுபோன்று மனித நேயத்துடன் உதவி செய்வது பாராட்டுக்குரியது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...