கோவை : கோவையில் 400 ஏக்கர் பரப்பளவில் கொடிசியா தொழிற்பூங்கா அமைக்கும் பணிகள் வரும் பிப்ரவரி மாதம் பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோரால் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.
கோவை : கோவையில் 400 ஏக்கர் பரப்பளவில் கொடிசியா தொழிற்பூங்கா அமைக்கும் பணிகள் வரும் பிப்ரவரி மாதம் பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோரால் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.
கோவை கொடிசியா தொழிற்பூங்காவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சியை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், எஸ்.பி. வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர். இதில், இன்ட் டெக்ஸ்போ என்ற தலைப்பில், வாங்குவோர், விற்போருக்கு இடையேயான வர்த்தக சந்திப்பு நடைபெற்றது. இக்கண்காட்சியில் மாநிலம் முழுவதும் உள்ள ஸ்பின்னிங், கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை, பட்டு என, ஜவுளித்துறையின் பல்வேறு பிரிவுகளை சார்ந்தோர், தங்கள் தயாரிப்புகளை 400 அரங்குகளில் அமைத்துக் காட்சிப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் ஜவுளித்துறை அமைச்சர் பேசும் போது, தமிழகத்தில் ஜவுளித்துறைக்கு அதிகளவு பங்களிப்பு அளிக்கப்படுகிறது. இந்த கண்காட்சி தமிழ்நாட்டினுடைய ஜவுளிகளின் சிறப்பம்சத்தை வெளிப்படுத்த மட்டுமில்லாமல், ஏற்றுமதியை அதிகரிக்கவும் மற்றும் மாநிலத்தின் வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாகவும் நடத்தப்படுகிறது என்றார். இதையடுத்து, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சில கோரிக்கைகளை முன் வைத்தார். அதில், திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள பின்னலாடைத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கான தங்குமிடம் மற்றும் விற்பனை சந்தையில் பருத்தியின் விலையை சமநிலையில் வைக்கவும் கோரினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர், மோப்பிரிப்பாளையத்தில், கொடிசியா தொழிற்பூங்காவின் கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி பிப்ரவரி 6 -ம் தேதி தொடங்கி வைக்கின்றனர். இதனால், 25000 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இது சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும்,"

மேலும், இந்நிகழ்ச்சியில் ஜவுளித்துறை அமைச்சர் ஜவுளித்துறையில் உள்ள சிறப்பு திட்டங்கள் பற்றியும், அதன் இன்றியமையா தேவை குறித்தும் பேசினார்.