திருப்பூர் : ஊத்துக்குளி ரயில் நிலையத்தில், பாலக்காடு - திருச்சி பயணிகள் ரயில் நின்று செல்லும் வகையில் புதிய நிறுத்தம் இன்று முதல் தொடங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலை நிறுத்திச் செல்ல வேண்டும் என ஊத்துக்குளி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில், ஊத்துகுளி பயணிகள் ரயில் நிறுத்தம் தொடங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

அந்நிகழ்வில், பாலக்காடு டவுன் முதல் திருச்சிராப்பள்ளி சந்திப்பு வரை செல்லும் பயணிகள் வண்டியை ஊத்துக்குளியில் நிறுத்தி செல்லும் வகையில் புதிய நிறுத்தம் தொடங்கப்பட்டது. அதனை சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு.என்.டி.வெங்கடாசலம் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.