கோவையில் குடி போதையில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய இளைஞர்கள்

கோவை : காந்தி பார்க் அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மீது பேருந்து மோதாமல் இருக்க பேருந்தை திருப்பி நிறுத்தியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அரசு ஓட்டுநரை இளைஞர்கள் தாக்கியதால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கோவை : காந்தி பார்க் அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மீது பேருந்து மோதாமல் இருக்க பேருந்தை திருப்பி நிறுத்தியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அரசு ஓட்டுநரை இளைஞர்கள் தாக்கியதால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்டது TN 38 N 2458 -என்ற எண் கொண்ட அரசு பேருந்து. இந்த பேருந்தானது ஆனைகட்டி பகுதி செல்லக்கூடிய முக்கிய பேருந்தாக உள்ளது. இதனை நேற்றிரவு ஓட்டி வந்த ஓட்டுநர் தேவகுமார், காந்திபார்க் அருகே வரும் போது தாறுமாறாக வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, பாதுகாப்பாக திருப்பி நிறுத்தினார். 



இதனையடுத்து, குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஹரி என்பவர் நடத்துனரை தகாத வார்த்தையில் பேசியுள்ளார். மேலும், ஒட்டுநரை அவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து படியில் இருந்து கீழே இழுத்து தாக்கியுள்ளனர். பின்னர், இதைக் கண்ட அப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியவர்கள்லிடருந்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை பாதுகாக்க முயற்சி மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து தகராறு செய்தவர்களைக் கேள்வி கேட்டதும், அந்த இளைஞர் 'தான் தினந்தந்தி நிருபர்' எனக்கூறி தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். 

அதேபோலவே, பேருந்தில் வந்தவர்களையும், பொதுமக்களையும் தகாத வார்த்தைகளில் பேசி மிரட்டியுள்ளனர். பின்னர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் தப்பித்துச் சென்றனர். இதையடுத்து, பொதுமக்கள் கையில் சிக்கிய மணச்சநல்லூரை சேர்ந்த ஹரி என்பவரைப் பிடித்து ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அரசு பேருந்து ஒட்டுநர் தேவகுமார் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் அரசு ஊழியர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த விசாரணையில், அந்த இளைஞர் நிருபர் இல்லை என்பதும், மது போதையில் வந்து தகராறு செய்துவிட்டு தன்னை பாதுகாத்துக்கொள்ள பத்திரிகையாளர் என பொய்யாக தகவல் தெரிவித்ததும் தெரியவந்துள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...