நீலகிரி : நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்களவை தேர்தலுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி, காங்கிரஸ் கட்சின் மாவட்ட தலைவரும், உதகை சட்டப்பேரவை உறுப்பினருமான கணேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய் தத் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :- தமிழகத்தில் ஆளும் கட்சி ஊழல் நிறைந்த கட்சியாக உள்ளது. வரும் மக்களவை தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்கள் மீளுவதற்கு, மோடி அரசை வீட்டிற்கு அனுப்பி விட்டு, ராகுல் தலைமையிலான அரசை நாட்டிற்கு தர வேண்டும், என்றார்/
இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் காங்கிரஸ் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஜே.பி.சுப்ரமணி, குன்னூர் நகர தலைவர் லாரன்ஸ், வட்டார தலைவர்கள் சுப்ரமணி, பாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், காங்கிரஸ் கட்சியினருக்கு தேர்தலை எதிர்கொள்ளும் அணுகுமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.