கோவை : தொண்டாமுத்தூர் ஒன்றியத்தினை சுற்றியுள்ள தொழில் முனைவோர்கள், இளைஞர்கள் மற்றும் சுயதொழில் புரிவோர்களுக்கான வங்கி தொழிற்கடன் மற்றும் தொழில்சார்ந்த விழிப்புணர்வு வழங்கும் விழா தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை நடக்கிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- ஊரக பகுதிகளில் படித்த, திறன்பெற்ற இளைஞர்களை, சுயதொழில் புரிவோர்களை, ஊக்குவித்து நிலையான தொழில்வளர்ச்சியினை ஏற்படுத்தும் விதமாக, தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், தொண்டாமுத்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொழில் முனைவோர்கள் வாங்கியாளர்கள் சந்திப்பு முகாம் முதன்முறையாக நடைபெறவுள்ளது.
இம்முகாமில் முகாமில் தொண்டாமுத்தூர் பகுதிகளிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கி மற்றும் இதர வங்கிகள் அரங்குகள் அமைக்கவுள்ளது. மேலும், இம்முகாமில் பங்கேற்கும் இளைஞர்கள், மற்றும் தொழில் முனைவோர்களுக்கு அனைத்துக் கடன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, கடன் பெறுவதற்குரிய அனைத்து வழிகாட்டுதலும் வழங்கப்படும். மேலும், அரசு துறைகள் மூலம் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து அனைத்து துறைகள் மூலம் அரங்குகள் அமைக்கப்பட்டு, அரசு திட்டங்கள் குறித்து தொழில் முனைவோருக்கு உரிய வழிகாட்டுதலும் வழங்கப்படவுள்ளது.
மேலும், ஸ்டேண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் பெண்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தொழில் செய்ய விரும்பும் பயனாளிகளுக்கு 10 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரையிலான வங்கிக் கடன் பெற்று தொழில் முனைவோராக உயர்த்துவதற்கு உரிய உதவிகள் வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவன கடன் உதவி பெறும் வகையில், திட்டத்தின் கீழ் 2 லட்சம் வங்கிக் கடன் 7 சதவீத வட்டி மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். மேலும், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு 7 சதவீதம் மானியத்துடன் 10 லட்சம் வரை வங்கிக்கடன் எளிதாகப் பெறும் வகையில் தேவையான உதவிகள் செய்யப்படவுள்ளது.
மேலும், சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவன செய்வதற்கு ஏதுவாக எம்.எஸ்.எம்.இ. சிட்கோ, டாப்செட்கோ, டாம்கோ மற்றும் தாட்கோ திட்டங்களின்கீழ், வங்கிக் கடன் உதவி பெறுவதற்கு இணையதளத்தின் மூலம் விண்ணப்பம் பதிவேற்றம் செய்வதற்கு தொடர் கண்காணிப்பு செய்து கடன் பெறுவதற்கு உரிய உதவிகளும், தேவையான பயிற்சிகளும், வழிகாட்டுதலும், வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, தொண்டாமுத்தூர் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள அனைத்து தரப்பினரும் இச்சிறப்பு வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.