கோவை : டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவும் வகையில், 5 லட்சம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி உதவிடும் 'ஒரு விதை புரட்சி' எனும் திட்டம் இயற்கை பவுண்டேசன் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் துவக்க நிகழ்வு ப்ரூக் பீல்ட்ஸ் வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில், அத்திக்கடவு கவுசிகா நதி மேம்பாட்டு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், ஜீவ சாந்தி அறக்கட்டளையைச் சேர்ந்த சலீம், மற்றும் கோவையைச் சேர்ந்த பல்வேறு தன்னார்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

இயற்கை பவுண்டேசன் தன்னார்வ அமைப்பினர் கோவை, உதகை மற்றும் வால்பாறை மாவட்டங்களில் பல்வேறு பசுமைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

'ஒரு விதை புரட்சி' திட்டம் குறித்து இயற்கை பவுண்டேசன் அமைப்பின் நிறுவனர் வினோத் ராஜ் கூறியதாவது :- கோவையின் பல்வேறு சமூகநல அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் என அனைவரும் இணைந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளான நாகை, திருவாரூர் தஞ்சை மாவட்டங்களில் சேதமடைந்த 50 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய மரங்களின் பசுமையை மீட்டெடுக்க முயற்சி எடுத்துள்ளோம். இதற்காக ஒருவர் ஒரு மரக்கன்று அல்லது நன்கொடையாக ரூ. 50 கொடுத்து உதவிடுவதின் மூலம் நாம் உயிர் வாழ உணவு அளிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்க மிகப்பெரும் பங்காற்றி விடுவோம், என்றார்.