ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கோவை ஈஷாவில் 5 நாள் யோகா மற்றும் தலைமைப் பண்பு பயிற்சி

கோவை : தமிழக அரசின் கூடுதல் செயலாளர் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரிகள் கோவை ஈஷா யோகா மையத்தில் 5 நாட்கள் தங்கி யோகா கற்றுக்கொண்டனர்.

கோவை : தமிழக அரசின் கூடுதல் செயலாளர் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரிகள் கோவை ஈஷா யோகா மையத்தில் 5 நாட்கள் தங்கி யோகா கற்றுக்கொண்டனர்.



சாதி, மதம், இனம், மொழி என எவ்வித பாகுபாடும் இன்றி ‘யோகா’ என்னும் உள்நிலை தொழில்நுட்பக் கருவியை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஈஷா யோகா மையம் வழங்கி வருகிறது. குறிப்பாக, கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் வருகை தந்து யோகா கற்று செல்கின்றனர். மேலும், பொதுமக்கள் மட்டுமின்றி மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றும் அதிகாரிகள், பாதுகாப்பு படை வீரர்களும் யோகா கற்பதற்காக ஈஷாவுக்கு வருகின்றனர்.

அதன்படி, தமிழகம், கர்நாடகா, இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 44 ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரிகள், கடந்த 21-ம் தேதி முதல் நேற்று தேதி வரை கோவை ஈஷா யோகா மையத்தில் தங்கி யோகா கற்றுக் கொண்டனர். இதில், தமிழ்நாடு கூடுதல் செயலாளர் ஒட்டம்டாய், சிம்லா தலைமை செயலாளர் திரு.பிரிஜ் குமார் அகர்வால், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையரகத்தின் தலைவர் சஞ்சீவ் ரஞ்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



அவர்களுக்கு ‘ஷாம்பவி மஹாமுத்ரா’ என்ற சக்தி வாய்ந்த தியானம் மற்றும் யோகா பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டன. யோகாவுடன் சேர்த்து தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பங்கேற்று, அரசு நிர்வாகத்தை சிறப்பாக நிர்வகிப்பது குறித்து பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...