நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வரும் கடும் பனிப்பொழிவால், தேயிலை செடிகள் கருகி, 135 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உபாசி வேளாண் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரியில் கடந்த நான்கு ஆண்டுகளை விட நடப்பாண்டு பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக உள்ளதால், செடிகள், விவசாய பயிர்கள், புல்வெளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பசுந்தேயிலை செடிகள் அதிகளவில் கருகியுள்ளன. உதகை, குன்னுார், குந்தா, கோத்தகிரி பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியசுக்கு குறைவாக உள்ளது. இதனால், தேயிலை தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை வரத்து குறைந்து வருகிறது.
இது குறித்து குன்னுார் உபாசி வேளாண் ஆராய்ச்சி மைய துணை இயக்குநர் கூறும்போது :- பனிப் பொழிவால், ஒரு ஏக்கருக்கு 600 கிலோ வரை தேயிலை வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு கிலோவுக்கு ரூ. 15 கிடைக்கும் நிலையில், கடந்த 3 மாதத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ. 9,000 இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 15 ஆயிரம் ஏக்கரில் தேயிலை செடிகள் கருகியுள்ளதால், மொத்த உற்பத்தியில் ரூ. 135 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் கருகிய இலைகளைக் கத்திரி மூலம் அகற்ற வேண்டும். 15 நாட்கள் விட்டு 'சிங்க்' உரமிட வேண்டும். புதிய அரும்பு வளரும் போது தாய் இலைகளை எடுக்க வேண்டும். பனிக்குப் பிறகு வரும் அரும்பு மிகவும் தரமுள்ளதாக இருக்கும். எனவே, விவசாயிகள் செடிகளை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.