கோவை : நாட்டின் 70-வது தினத்தையொட்டி முத்தண்னன் குளத்தை இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் தூய்மைப்படுத்தினர்.

குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் (இ.எஃப்.ஐ.) சார்பில் நாடு முழுவதும் உள்ள 8 மாநிலங்களில் உள்ள குளங்களை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. 'ஃபார் ஏ ஸ்டார்ட்டர் வாலண்டியர் ஃபார் வாட்டர்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த தூய்மைப் பணியானது கோவை மாவட்டத்தில் உள்ள முத்தண்னன் குளத்திலும் நடைபெற்றது.

சுமார் 35 தன்னார்வலர்கள் இணைந்து, தூய்மைப்படுத்தும் கருவிகளைப் பயன்படுத்தி குளத்தில் கிடந்த ரப்பர், தெர்மாகோல், பிளாஸ்டிக் மற்றும் மருத்துவக் கழிவுகள், கட்டிடக் கழிவுகள் உள்பட 1.5 டன் எடை கொண்ட குப்பைகளை, கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களின் உதவியுடன் அகற்றினர்.