கோவை : கௌமரம் பிரசாந்தி அகாடமியைச் சேர்ந்த 4 மாற்றுத்திறனாளி மாணவர்கள் 8-ம் வகுப்பு பள்ளித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆச்சர்யம் அளித்துள்ளனர்.
கோவை : கௌமரம் பிரசாந்தி அகாடமியைச் சேர்ந்த 4 மாற்றுத்திறனாளி மாணவர்கள் 8-ம் வகுப்பு பள்ளித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆச்சர்யம் அளித்துள்ளனர்.

கௌமரம் பிரஷாந்தி அகாடமியில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு கல்வி மற்றும் தங்களது குறைகளை மறந்து திறம்படச் செயல்படுவது குறித்து கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த அகாடமியைச் சேர்ந்த 4 மாணவர்கள் 8-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.

"இந்த மாணவர்கள் தங்களது முழு ஆர்வம், ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கையின் காரணமாக இலக்கை எட்டியள்ளனர். தேர்ச்சி குறித்த செய்தியைக் கேட்டு ஆச்சரியப்பட்டோம். அடுத்தகட்டமாக, நாங்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நோக்கி செல்கிறோம்," என்கிறார் தீபா மோகன்ராஜ்.