கோவை : பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், தேர்தல் விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் தவிர்ப்பது குறித்த உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில், சோமையனூர் கிராமத்தில் இன்று குடியரசு தினவிழாவினையொட்டி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் பார்வையாளராக கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். பின்னர், மகளிர் திட்டம் சார்பில் 2 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தலா ரூ. 25,000 வீதம் கடனுதவிகளை வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது :- இயற்கை வளங்களைப் பாதுகாக்க மக்காத குப்பைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்தக்கூடாது. மேலும், சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள். எனவே, வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும், இவ்வாறு கூறினர்.
மேலும், இக்கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், திட்ட அறிக்கை, குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதிச் செலவினங்களின் விவரங்கள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி வளர்ச்சித்திட்டம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, தேர்தல் விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு தொடர்பான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், தலைமையில் கிராம பொதுமக்கள், அரசு அலுவலர்கள் என அனைவரும் எடுத்துக்கொண்டனர்.