கோவையில் தற்காலிக ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் விநியோகம்

கோவை : தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் கோவை மாவட்ட கல்வி அலுவகத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

கோவை : தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் கோவை மாவட்ட கல்வி அலுவகத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.



இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறியதாவது :- தற்போது வரை கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 800 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களின்படி, இன்று மாலைக்குள் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, எந்தெந்த பள்ளிகளில் பணிபுரிய வேண்டும் என்று முடிவு செய்யப்படும். தற்போது, தொடக்கப் பள்ளிகளுக்கு அதிக அளவில் ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு தற்போது அரசு தேர்வு வருகின்ற காரணத்தினால், அவர்களுடைய படிப்பு பாதிக்கப்படும். அதற்கு தகுந்தாற்போல் 10-ம் வகுப்பு, பிளஸ்-1 பிளஸ்-2 ஆகிய மாணவ மாணவிகளுக்கு ஏற்ப, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர்.



மலைவாழ் மக்கள் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விருப்பமுள்ள தற்காலிக ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக மாவட்ட கல்வி அலுவலகத்தை அணுகலாம். டெட் முடித்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த யாராக இருந்தாலும், மாவட்ட கல்வி அலுவலகத்தை இன்று மாலைக்குள் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். அவர்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்தால், இன்று மாலைக்குள் தேர்வு செய்யப்பட்டு, தேவைப்படும் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர், எனக் கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...