சிங்காநல்லூர் பாதாள சாக்கடை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி

கோவை : சிங்காநல்லூரில் பாதாள சாக்கடையின் விஷவாயு தாக்கிய சம்பவத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவியை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

கோவை : சிங்காநல்லூரில் பாதாள சாக்கடையின் விஷவாயு தாக்கிய சம்பவத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவியை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். 

சிங்காநல்லூர் குடியிருப்பு திருநகர் குடியிருப்போர் நலச்சங்க கட்டிடம் அமைந்துள்ள பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பினை சரிசெய்யும் பணியில், அந்தக் குடியிருப்பு சங்கத்தினர், மாநகராட்சி அனுமதியின்றி இருவரை ஈடுபடுத்தியது. அப்போது, பாதாள சாக்கடையின் விஷவாயு தாக்கியதில் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதையடுத்து, மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் தடைச்சட்டம் 2013-ன்படி, உயிரிழந்த முருகன் (37), பாண்டித்துரை (29) ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் ஐயம்மாள், கீர்த்தனா ஆகியோரிடம் தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை மாநகராட்சி நிதியிலிருந்து, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுனன், வி.சி. ஆறுக்குட்டி, பி.கஸ்தூரிவாசு, காவல் ஆணையாளர் சுமித் சரண், மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், மாநகராட்சி துணை ஆணையாளர் ப.காந்திமதி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...