கோவை : கோவை மாநகராட்சி அலுவலகம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 70-வது குடியரசு தின விழாவையொட்டி இன்று தேசிய கொடியேற்றப்பட்டது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் 70-வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் மகாத்மா காந்தியடிகளின் திருஉருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், விக்டோரியா அரங்க வளாகத்தில் தேசியக் கொடியினை அவர் ஏற்றி வைத்தார்.

இவ்விழாவில் மாநகராட்சி துணை ஆணையாளர் ப.காந்திமதி முன்னிலை வகித்தார். இதைத் தொடர்ந்து, செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த சாரணர்படை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையினை மாநகராட்சி ஆணையாளர் ஏற்றுக்கொண்டார்.
பின்னர், கோவை மாநகராட்சியில் 25 ஆண்டுகள் அப்பழுக்கின்றி பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 24 பேருக்கு வெகுமதியாக தலா ரூ. 2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் வழங்கினார். இதைத் தொடர்ந்து, பரதநாட்டிய பயிற்றுனர் குழுவின் மாணவியர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி மற்றும் மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
இதேபோல, குடியரசு தினத்தையொட்டி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நீ. குமார், தேசியக் கொடி ஏற்றி குடியரசு தின விழா உரையாற்றினார்.

அப்போது, 100 ஆண்டுகளுக்கு மேலான தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இந்தியாவில் முதன்மையான பல்கலைக்கழகமாகவும் உலக அளவில் பட்டியலிடப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் இருப்பது நமக்கு பெருமை சேர்ப்பதாக அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, சிறந்த தேசிய மாணவர் படை மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறுவர், சிறுமியர் மற்றும் மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன.