திருப்பூர் : 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய கொடியை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி ஏற்றி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் குடியரசு தின நிகழ்ச்சிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில், மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி பங்கேற்று, தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், வருவாய்த்துறை, வேளாண்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 245 பயனாளிகளுக்கு 63 லட்சத்து 6 ஆயிரத்து 346 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி வழங்கினார்.

அதேபோல, 95 போலீசாருக்கு சிறந்த காவலர்களுக்கான முதலமைச்சர் விருது உட்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டதோடு, தியாகிகளும் கவுரவிக்கப்பட்டனர். இதையடுத்து, பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், அரசு அதிகாரிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.