மேட்டுப்பாளையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு போலீசார் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

கோவை : மேட்டுப்பாளையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.


கோவை : மேட்டுப்பாளையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. 

நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வரும் குடியரசு தினத்தையொட்டி, மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இதன் பின்னர், காவல்நிலையத்தில் இருந்து என்பீல்ட் நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. 100-க்கும் மேற்பட்ட புல்லெட் வாகனத்தில் தேசிய கொடியினை கட்டியபடி, மேட்டுப்பாளையம் ராயல் என்பீல்ட் ரைடர்கள், போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் ஹெல்மெட் அணிந்தபடி நகரத்தின் முக்கிய வீதிகள் வழியே வாகனப் பேரணி நடத்தினர். 

100-க்கும் மேற்பட்ட புல்லெட் வாகனத்தில் தேசிய கொடியினை கட்டியபடி மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் ஹெல்மெட் அணிந்தபடி நகரத்தின் முக்கிய வீதிகள் வழியே வாகனப் பேரணி நடத்தினர். 

இதன் பின்னர் மேட்டுப்பாளையம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் காரமடை, வீரபாண்டிப்பிரிவு வழியே சுமார் 25 கிலோ மீட்டர் வரை பயணித்து பெரியநாயக்கன்பாளையம் வரை இந்த போலீஸ் வாகனப் பேரணி நடைபெற்றது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...