வாடிக்கையாளர் பெயரில் கணக்கு தொடங்கி ரூ. 26 லட்சம் மோசடி : கோவையில் வங்கி மேலாளர் கைது

கோவை : வாடிக்கையாளர் பெயரில் போலியான கணக்கு தொடங்கி, ரூ. 26 லட்சம் மோசடி செய்த கோவையைச் சேர்ந்த பிரபல வங்கியின் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

கோவை : வாடிக்கையாளர் பெயரில் போலியான கணக்கு தொடங்கி, ரூ. 26 லட்சம் மோசடி செய்த கோவையைச் சேர்ந்த பிரபல வங்கியின் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

காளப்பட்டியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளை முன்பு ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் என்ற பிரிவு செயல்பட்டு வந்தது. அப்போது, அந்த வங்கியில் கிளை மேலாளராகப் பணியாற்றி வந்த ஜோசையா பங்குலூரி என்பவர் வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல், அவர்கள் பெயரில் கூடுதல் கணக்கு தொடங்கி, அதில் ரூ.17 லட்சம் பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளார். இந்த விவகாரம் தெரிந்ததைத் தொடர்ந்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, கோவை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் மண்டல மேலாளர் ஜோசப் கிருஷ்டி, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரணிடம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் தேதி புகார் மனு அளித்திருந்தார்.

அதனடிப்படையில், காவல் ஆணையர் சுமித்சரண், குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் உத்தரவின் பேரில், மாநகர குற்றப்பிரிவு போலீசார் ஜோசையா பங்குலூரி மீது மோசடி பிரிவின் கீழ் வழக்குப் பதிந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த அவர் தலைமறைவானார். இந்த நிலையில், ஆந்திரா மாநிலம் நெல்லூரில் தலைமறைவாக இருந்த ஜோசையா பங்குலூரியை கடந்த வியாழக்கிழமை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை கோவை மாநகர குற்றப்பிரிவிற்கு அழைத்து வந்து விசாரித்தனர். 



அதில், வாடிக்கையாளர் பெயரிலும், வங்கிக் கணக்கில் இருந்தும் ரூ.26 லட்சம் வரை பணத்தை மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் ஜோசையா பங்குலூரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...