கோவை : 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மற்றும் திருப்பூரில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நேற்று நள்ளிரவிலும் போராட்டத்தை தொடர்ந்த நிலையில், முக்கிய உறுப்பினர்களை போலீசார் கைது செய்தனர்.

ஜாக்டோ ஜியோ சார்பில் நேற்று 4-வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை போலீசார் கோவை லட்சுமி மில் பகுதியில் உள்ள மீனாட்சி ஹாலிலும், அதேபோல, கணபதி பகுதியில் உள்ள சி.எம். மண்டபத்திலும் தங்க வைத்திருந்தனர். இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 06.30 மணியளவில் போலீசார் அனைவரையும் மண்டபத்திலிருந்து வீட்டிற்கு கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால், கலைந்து சென்றால் சங்கத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்வார்கள் என்பதை அறிந்த போராட்டக்காரர்கள் மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்து இருந்தனர்.

இதில், மீனாட்சி ஹாலில் உள்ள 900-க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ உறுப்பினர்களும், அதேபோல, சி.எம். மண்டபத்தில் உள்ள 1,400 உறுப்பினர்களும் விடிய விடிய மண்டபத்தில் இருந்தபடி தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வந்தனர். பின்னர், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின், மீனாட்சி ஹாலில் இருந்த 6 பேரும், சி.எம். மண்டபத்தில் இருந்த 5 பேரும் அதிகாலை 02.30 மணிக்கு கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மண்டபத்தில் இருந்த அனைவரும் கலைந்து, அவரவர் வீட்டுக்குச் சென்றனர். நள்ளிரவில் அங்கிருந்து வெளியேறிய ஜாக்டோ - ஜியோ உறுப்பினர்கள், தங்கள் வீட்டுக்கு செல்ல வாகனங்கள் இன்றி சாலையில் நின்றபடி காத்திருந்தனர்.
இதேபோல, நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்ட 2,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உட்பட ஜாக்டோ - ஜியோ போராட்டக்குழுவினரை போலீசார் கைது செய்து 2 தனியார் திருமண மண்டபங்களில் அடைத்து வைத்தனர். மாலை 6 மணிக்குப் பிறகும் அவர்களை போலீசார் விடுதலை செய்யாத நிலையில், இரவு 9 மணிவரை போராட்டக்குழுவினர் காத்திருந்தனர். அப்போது, தங்களுக்கு காவல்துறை தண்ணீரும், உணவும் கூட வழங்காமலும், பெண் ஊழியர்களை விடுதலை செய்யாமலும் பழிவாங்கும் நோக்குடன் போலீசார் நடத்துவதாக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில், போலீசாருக்கும் போரட்டக்குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, போராட்டக்குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற போலீசார் சிலரை, போராட்டக்காரர்கள் சிறைபிடித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர், இரவு 11 மணியளவில், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் காவல்துறையினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, ஜாக்டோ ஜியோ அமைப்பின் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், சுந்திரமூர்த்தி, தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் செல்வம் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் மற்றவர்களை விடுதலை செய்தனர்.

மேலும், பெண் ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில், அரசும், காவல்துறையினரும் எங்களை பழிவாங்கும் நோக்கத்துடன் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், ஜாக்டோ ஜியோ தலைமையின் அறிவிப்புபடி திங்கட்கிழமையும் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.