தற்காலிக ஆசிரியர்களின் ஊதியம் 10 ஆயிரமாக உயர்வு

கோவை : போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களுக்கு நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியர்களின் ஊதியத்தை ரூ.10,000-ஆக பள்ளிக் கல்வித்துறை அதிகரித்துள்ளது.

கோவை : போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களுக்கு நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியர்களின் ஊதியத்தை ரூ.10,000-ஆக பள்ளிக் கல்வித்துறை அதிகரித்துள்ளது. 

தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் நடவடிக்கை மற்றும் சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் சார்பில் 4-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆசிரியர்களின் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், பல மாவட்டங்களில் 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

இதனிடையே, அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. இருப்பினும், போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு 17-பி பிரிவின் கீழ் பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்குப் பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது. ரூ. 7,000 தொகுப்பு ஊதியத்திற்கு ஆசிரியர்களை நியமிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், 4வது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தின் காரணமாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. மேலும், அவர்களுக்கான ஊதியத்தை ரூ.7,000-ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...