சேலம் : இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் பா.ஜ.க., நிர்வாகிகள் மீது சேலம் மாநகர காவல் ஆணையரிடம் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் மனைவியுடன் சென்று மனு அளித்துள்ளார்.

இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பியூஷ் மனுஷ் வெளியிட்டுள்ள செய்தியில், தனது குடும்ப உறுப்பினர்கள் பற்றி தவறான செய்திகளை பா.ஜ.க.,வைச் சேர்ந்தவர்களும், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோர் பரப்பி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்க வந்துள்ளதாக, மனைவி மோனிகாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.