கோவை : தடாகம் பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த மற்றொரு காட்டு யானையான சின்னத்தம்பி, பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு பிடிக்கப்பட்டு, லாரியின் மூலம் ஆனைமலை கொண்டு செல்லப்பட்டது.

தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு சின்னதம்பி, விநாயகன் ஆகிய இரண்டு காட்டு யானைகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கைக்குப் பின்னர், கடந்த டிசம்பர் மாதம் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு விநாயகன் யானை, கும்கி யானைகளான விஜய், சேரன், ஜான் மற்றும் பொம்மன் ஆகியவற்றின் உதவியதால் பிடிக்கப்பட்டது. பின்னர், வனத்துறைக்குச் சொந்தமான லாரியில் ஏற்றி, முதுமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.
இந்த நிலையில், மற்றொரு காட்டு யானையான சின்னதம்பியை பிடிப்பதற்கான முயற்சியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். குட்டி உள்பட 2 யானைகளுடன் சுற்றித் திரிந்த சின்னத்தம்பியை, வனத்துறையினர் 3 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு, தனியாகப் பிரித்தனர். இருப்பினும், பிற யானைகள் உடன் இருப்பதால், சின்னத்தம்பியை லாரியில் ஏற்றுவது அரிதான காரியம் என்பதை வனத்துறையினர் உணர்ந்தனர்.
இதைத் தொடர்ந்து, ஊசியின் மூலமாக மூன்று முறை மயக்க மருந்து (14ML) செலுத்தப்பட்ட சின்னத்தம்பி, ஓரிடத்தில் நிற்க முடியாமல் நடந்து கொண்டே இருந்தது. விநாயகன் யானையை லாரியில் ஏற்றியதைப் போன்றே, சின்னத்தம்பியின் கால்களிலும் கயிறு கட்டி மரத்தில் கட்டப்பட்டது. பின்னர், சின்னத்தம்பியின் மீது வனத்துறை ஊழியர் ஒருவர் ஏறி, ரேடியோ காலரைப் பொருத்தினார். இதைத் தொடர்ந்து, கலீம், விஜய் ஆகிய கும்கி யானைகளின் உதவியால் அடுத்தகட்டமாக, லாரியில் ஏற்றப்பட்டது. அப்போது, சின்னத்தம்பியின் இருதந்தங்களும் உடைந்தன. இது அங்கு கூடியிருந்த பொதுமக்கள், வனஆர்வலர்கள், சுற்றுச்சூழல் பாதுகாவலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பின்னர், சின்னத்தம்பியை விடும் பகுதி பற்றி அறிவிக்கப்படாத நிலையில், அதனை லாரியின் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர்.