வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மேட்டுப்பாளையம் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

கோவை : வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோவை : வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 



வருவாய்த்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், 18 வயது பூர்த்தி அடைந்த ஒவ்வோரு குடிமகனும், தனது ஜனநாயக கடமையை செய்ய வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையத்தில் உள்ள கோப்ரட்டீவ் காலனியில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியை மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் புனிதா தொடங்கி வைத்தார். சுமார் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறுச் சென்று, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்தப் பேரணி, மேட்டுப்பாளையத்தில் உள்ள கோவை சாலை, உதகை சாலை என முக்கிய சாலைகளின் வழியே வலம் வந்தது. 



அப்போது, ஜனநாயக கடமையை ஒவ்வோரு குடிமகனும் நாட்டிற்கு செய்ய கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். ஒரு கிலோ மீட்டர் வரை நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம் பேருந்து நிலையத்தில் நிறைவுற்றது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...