கீழடி அருகே விரைவில் 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கும் என தகவல்

மதுரையை அடுத்துள்ள கீழடி அருகே மனிதன் வாழ்ந்ததற்கான ஆதாரத்தை நிரூபிக்கும் வகையில், விரைவில் 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையை அடுத்துள்ள கீழடி அருகே மனிதன் வாழ்ந்ததற்கான ஆதாரத்தை நிரூபிக்கும் வகையில், விரைவில் 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மதுரையை அடுத்த சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள பள்ளிச்சந்தை திடல் எனும் பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் மத்திய அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. வைகை நதிக்கரை நாகரிகத்தைக் கண்டறியக்கூடிய முயற்சியாக இந்த அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் 3 அகழாய்வுகளை மத்திய தொல்லியல் துறை மேற்கொண்டது. இந்த நிலையில், நான்காம் கட்ட அகழாய்வை மேற்கொள்ள நிதியில்லை என்ற காரணத்தால் மத்திய தொல்லியல் துறை முன்வரவில்லை. இதனையடுத்து, ரூ. 47 கோடி செலவில் 4-ம் கட்ட அகழாய்வை தமிழக அரசே மேற்கொண்டது. 

இதைத் தொடர்ந்து, மனிதன் வாழ்ந்தது தொடர்பான ஆதாரத்திற்காக 5-ம் கட்ட ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அகழ்வாராய்ச்சி பணிகள் பலனாக ஆயிரக்கணக்கான தொல்லியல் பொருட்களும், எலும்புகளும் கிடைத்திருப்பதால், கீழடியில் தொடர்ந்து ஆய்வு நடத்த வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். எனவே, அடுத்தக்கட்ட அகழாய்வை நடத்த தமிழக தொல்லியல் துறை அனுமதி கேட்டிருந்தது. இந்த நிலையில், 5-ம் கட்ட அகழாய்வை நடத்துவதற்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது. இதையும், தமிழக தொல்லியல் துறை நடத்துவதற்கே வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், மதுரையை அடுத்துள்ள கீழடி அருகே விரைவில் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5ம் கட்ட ஆய்வுக்கு கொந்தகை, பசியாபுரம், மாறநாடு உள்ளிட்ட 6 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் கொந்தகையில் உள்ள 15 ஏக்கர் நிலமும் அடங்கும். இந்த கொந்தகை மகாபாரதத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளதால் அங்கு நிறையப் பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. 

கீழடியில் மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் இதுவரை நடத்தியுள்ள 4 கட்ட அகழ்வாராய்ச்சியில் யானை தந்ததால் ஆன தாயக்கட்டை, உறைக்கிணறு, கட்டிடச்சுவர், மண் பாண்டங்கள் என 6,000 பொருட்கள் வரை கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே, 5-ம் கட்ட ஆய்வையும், அமர்நாத் குழுவினரே தொடர வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...