லக்ஷயா திட்டத்தின் மூலம் தாய், சேய் இறப்பைக் குறைக்கும் கோவை அரசு மருத்துவமனை

கோவை : மத்திய அரசின் லக்ஷயா திட்டத்தை செயல்படுத்தி பிரசவத்தின் போது, தாய்,சேய் இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை : மத்திய அரசின் லக்ஷயா திட்டத்தை செயல்படுத்தி பிரசவத்தின் போது, தாய்,சேய் இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் தாய் சேய் இறப்பு விகிதத்தைக் குறைக்க கடந்த ஆண்டு லக்ஷயா என்ற புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசால் பிரசவ அறை, மகப்பேறு அறுவைச் சிகிச்சை அரங்கு மற்றும் மகப்பேறியல் தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) மற்றும் அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் கர்ப்பிணி பெண்களைக் கவனித்துக்கொள்ளும் தரத்தை மேம்படுத்த இத்திட்டம் வழிவகுக்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் அனைத்து கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் பயனளிக்கும். 

அதேபோல, அரசு மருத்துவமனைக்கு வரும் அனைத்து கர்ப்பிணிகளின் மன திருப்தி மற்றும் கௌரவமான பேறுகால கவனிப்புக்கும் இந்த திட்டம் வழிவகுக்கும். இந்தத் திட்டத்தில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தலைமை மருத்துவமனைகளில் உள்ள பிரசவ வார்டுகளை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசு தேசிய தரச் சான்றிதழுடன் நிதி உதவி வழங்கவும் உள்ளது.

கோவை அரசு மருத்துவமனை ;

கோவை மற்றும் கோவை மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள், பிரசவத்திற்கு என்றாலே கோவை அரசு மருத்துவமனையை நாடி வருவது கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. நம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தினமும் 7,000-க்கும் அதிகமான வெளிநோயாளிகளும், 1,300க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் வந்து செல்கின்றனர். இதில், கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் திருப்பூர், ஈரோடு, நீலகிரி போன்ற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். 

இப்படி ஆயிரக்கணக்கானோர் பல்வேறு நோய்களுக்காக இங்கு வந்து சிகிச்சை பெற்று வரும் சூழலில், பிரசவத்திற்காக வரும் தாய்மார்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு முக்கிய காரணம் அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவம் பார்க்கப்படுவதே என தாய்மார்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல, ஆண்டுக்காண்டு தாய்,சேய் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால், மகப்பேறு காலத்தில் கோவை அரசு மருத்துவமனையைப் பல தரப்பினரும் நாடி வருகின்றனர்.




லக்ஷயா திட்டம் ;

மத்திய அரசின் லக்ஷயா திட்டத்தின் மூலம் பிரசவத்தின் போது ஏற்படும் தாய்-சேய் இறப்பு விகிதத்தைக் குறைக்க கோவை அரசு மருத்துவமனையில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போதும், அதற்கு பின்பும் தாய் மற்றும் குழந்தையை பராமரிக்க பல்வேறு வசதிகள் உள்ளன. தற்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள நெறிமுறைகளை கடைபிடிப்பதன் மூலமாக, பேறுகால சிகிச்சை தரத்தை இன்னும் உயர்த்த முடியும். அதோடு, அறுவை கூடத்தின் உபகரணங்களையும் மேம்படுத்த முடியும். 

தற்போது இம்மருத்துவமனையின் பிரசவ வார்டில் மட்டும் 145 படுக்கைகள் உள்ளன. 24 மணி நேரமும் செயல்படும் மகப்பேறு மருத்துவத்துறையில் தாய் சேய் இறப்பு விகிதத்தைக் குறைக்க மருத்துவர்கள் தீவிர முயற்சியில் உள்ளனர். 

இவ்வாறு இறப்பு விகிதத்தைக் குறைத்து வரும் கோவை அரசு மருத்துவமனை, லக்ஷயா திட்டத்தை முறையாக பயன்படுத்தும் போது, தாய்-சேய் இறப்பு விகிதம் மேலும் குறையும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...