கோவை : ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வகையிலான தனிச்சட்டத்தை இயற்றக்கோரி கோவையில் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை : ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வகையிலான தனிச்சட்டத்தை இயற்றக்கோரி கோவையில் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனையடுத்து, ஆலையை உடனடியாக திறக்க வேண்டுமென ஸ்டெர்லைட் நிர்வாகமும், திறக்கக் கூடாது என பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்குக் காவல்துறை நெருக்கடி அளிப்பதைக் கைவிட வேண்டுமெனவும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு முறையாகக் கொள்கை முடிவெடுக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.